பிரதிநிதித்துவப்படம் 
க்ரைம்

டெல்லி கஃபே உரிமையாளர் தற்கொலை - மனைவி உடனான தகராறே காரணம் என உறவினர்கள் புகார்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: வடக்கு டெல்லியில் உள்ள கல்யாண் விஹார் பகுதியில் உள்ள தனது வீட்டில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் புதன்கிழமை தெரிவித்தனர். தற்கொலை செய்து கொண்டவர் டெல்லியில் உள்ள பிரபல கஃபேவின் இணை நிறுவனர் புனீத் குரானா எனத் தெரியவந்திருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

இதுகுறித்து வடமேற்கு துணை காவல் ஆணையர் (டிசிபி) பிஷ்ம சிங் கூறுகையில், "டிசம்பர் 31ம் தேதி மாலையில் இந்தச் சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. தகவல் கிடைத்ததும், போலீஸ் குழு ஒன்று சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றது. அந்தக் குழு இறந்தவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான அடையாளமாக கழுத்து இறுகிய காயத்துடன் கட்டிலில் உயிரிழந்த நிலையில் கிடந்ததை பார்த்துள்ளது.

இறந்தவரின் மொபைல் போன் மற்றும் அவர் தொடர்பான பிற ஆவணங்களை அவரின் தந்தை போலீஸாரிடம் அளித்துள்ளார். அவை போலீஸார் வசம் உள்ளன. உடல்கூராய்வுக்கு பின்பு இறந்தவரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது" என்று தெரிவித்தார்.

இதனிடையே, 'இறந்தவர் ஒரு தொழிலதிபர். அவருக்கு அவரின் மனைவி மற்றும் மாமியாரிடம் இருந்து துன்புறத்தல் இருந்தது. இறந்தவரும் அவரது மனைவியும் விவாகாரத்து பெறும் நிலையில் இருந்தனர். அவர்கள் இருவரும் இணைந்து பார்த்து வந்த தொழில் பிரச்சினையில் சிக்கியிருக்கிறது' என இறந்தவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக பெங்​களூரு தனியார் நிறு​வனத்​தில் மேலா​ளராக பணியாற்றிய அதுல் சுபாஷ் தனது மனைவியும் அவரது உறவினர்களும் தன்னை துன்புறுத்துவதாக கூறி தற்கொலை செய்து கொண்ட சில தினங்களுக்கு பின்பு இந்த தொழிலதிபர் தற்கொலையும் நடந்துள்ளது. அதுல் சுபாஷ் கடந்த 16-ம் தேதி இறப்ப​தற்கு முன்பு, 24 பக்கங்​களில் தற்கொலைக்கான காரணத்தை விவரிக்​கும் கடித​மும், 90 நிமிடங்கள் அவர் பேசும் வீடியோவை​யும் வெளி​யிட்​டார்.

அதில் தன் மனைவி நிகிதா சிங்​காரி​யா​வுடனான விவாகரத்து வழக்​கில் ஜீவனாம்சமாக ரூ.3.3 கோடி கேட்டு துன்புறுத்​தி​யது, பொய் வழக்​குகளை தொடுத்து தொல்லை கொடுத்​தது, வழக்கை தீர்க்க நீதிபதி ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டது ஆகிய​வற்றை குறிப்​பிட்டிருந்தார்.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.

SCROLL FOR NEXT