கோப்புப் படம் 
க்ரைம்

நெல்லை நீதிமன்றம் முன்பு இளைஞர் வெட்டிக்கொலை

அ.அருள்தாசன்

நெல்லை: நெல்லையில் நீதிமன்றம் முன்பு இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாளையங்கோட்டையில் உள்ள திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு சாலையில் மாயாண்டி என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். காரில் வந்த மர்ம நபர்கள் இளைஞரை நீதிமன்ற வாசலில் வெட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு கீழ நத்தத்தில் ஊராட்சி உறுப்பினராக இருந்த ராஜாமணி என்பவர் கொலைக்கு பழிக்கு பழியாக இந்தப் படுகொலை செய்யப்பட்டது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. முன்விரோதம் காரணமாக மாயாண்டி என்பவர் நீதிமன்றத்துக்கு முன்பு நாலு பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT