க்ரைம்

ஏழுமலையான் கோயில் உண்டியலில் பணம் திருடிய சென்னை பக்தர் கைது

செய்திப்பிரிவு

திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் பணம் திருடியதாக சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் மூலம் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமிக்கு காணிக்கை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 23-ம் தேதி பக்தர் ஒருவர் கோயில் உண்டியலில் பணம் செலுத்துவதை போல் செலுத்தி, அதில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி உள்ளார்.

இது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி விட்டதால் உடனடியாக தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் அந்த பக்தரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் சென்னையை சேர்ந்த வேணுலிங்கம் எனவும் உண்டியலில் இருந்து அவர் ரூ.15,000 திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து திருமலை போலீஸார் அவரை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT