முத்துப்பாண்டி 
க்ரைம்

காரைக்குடியில் ரூ.60 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார்-பதிவாளர், பத்திர எழுத்தர் கைது

செய்திப்பிரிவு

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர் வைரவேல். நகைக்கடை நடத்தி வரும் இவர், தனக்குச் சொந்தமான சில இடங்களை விற்பனைசெய்தார். இதற்கான பத்திரப் பதிவு காரைக்குடி சார்-பதிவாளர் அலுவலகம் எண்-2-ல் நடைபெற்றது. ஆனால், பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை விடுவிக்கவில்லை.

அவற்றை விடுவிக்குமாறு பத்திர எழுத்தர் புவனப்பிரியாவை அணுகியபோது, சார்-பதிவாளருக்கு ரூ.60,000 லஞ்சம் கொடுக்கவேண்டுமென தெரிவித்தார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத வைரவேல், இதுகுறித்து சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் தெரிவித்தார். போலீஸார் ஏற்பாட்டின்படி, ரசாயனப் பொடி தடவிய ரூ.60 ஆயிரம் நோட்டுகளை பத்திர எழுத்தர் புவனப்பிரியாவிடம் நேற்று வைரவேல் கொடுத்தார்.

அப்போது, டிஎஸ்பி ஜான்பிரிட்டோ தலைமையிலான போலீஸார், புவனப்பிரியாவை கைது செய்தனர். சார்-பதிவாளர் (பொறுப்பு) முத்துப்பாண்டி கேட்டதன் அடிப்படையில் ரூ.60 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக புவனப்பிரியா தெரிவித்தார். இதையடுத்து, சார்-பதிவாளர் முத்துப்பாண்டியையும் போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT