க்ரைம்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.27 லட்சம் தங்கம் கடத்திய பெண் கைது

செய்திப்பிரிவு

திருச்சி: கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு ஏர் ஏசியா விமானத்தில் வந்த பயணிகளை, விமான நிலைய வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத் துறை அலுவலர்கள் சோதனை செய்தனர்.

அப்போது, ஒரு பெண் தனது உடையில் தங்கச் சங்கிலிகளை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பெண்ணைக் கைது செய்த அதிகாரிகள், அவரிடமிருந்து ரூ.27.14 லட்சம் மதிப்பிலான, 359.5 கிராம் தங்கச் சங்கிலிகளை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அந்தப் பெண் கோலாலம்பூர் விமான நிலையத்துக்குள் நுழைந்தபோது, அங்கிருந்த ஒருவர் தங்கச் சங்கிலிகளை திருச்சியில் கொண்டு போய் கொடுத்தால் ரூ.5,000 தருகிறேன் என்று கூறி, தங்கச் சங்கிலிகளை கொடுத்து அனுப்பியது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

SCROLL FOR NEXT