க்ரைம்

மதுரையில் பள்ளி மாணவி கர்ப்பம்: போக்சோ சட்டத்தில் கோயில் பூசாரி கைது

செய்திப்பிரிவு

மதுரை: பள்ளி மாணவியை கர்ப்பிணியாக்கியதாக எழுந்த புகாரின் பேரில், கோயில் பூசாரியிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரையைச் சேர்ந்த தம்பதியின் 17 வயது மகள் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படிக்கிறார். இவருக்கு திடீரென வயிறு வலி ஏற்பட்டதால், அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் நேற்று அழைத்துச் சென்றனர். பரிசோதனையில், அந்த மாணவி 9 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் தல்லாகுளம் மகளிர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட மாணவியிடம் போலீஸார் விசாரித்தபோது, கண்ணனேந்தல் பகுதியில் உள்ள கோயில் பூசாரி ஒருவரே கர்ப்பத்துக்குக் காரணம் என்று கூறியுள்ளார். இதையடுத்து, அவரைப் போலீஸார் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "மாணவியின் வறுமையைப் பயன்படுத்திக் கொண்டு, அவருக்கு பண உதவி செய்வதாகக் கூறி பூசாரி கோயிலுக்கு அழைத்துள்ளார். ஆரம்பத்தில் கோயிலை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளைச் செய்யவைத்திருக்கிறார். பின்னர், பூசாரி மாணவியை கர்ப்பிணியாக்கி இருக்கலாம் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. 48 வயதான அந்த பூசாரி மேலும் சில மாணவிகள், பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருப்பதும் தெரியவந்துள்ளது. விசாரணை முடிவில், போக்சோ சட்டத்தில் அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது" என்றனர்.

SCROLL FOR NEXT