திருச்சி விமான நிலையத்தில் 2 பயணிகளிடம் வான் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் பறிமுதல் செய்த நகைகள். 
க்ரைம்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.16 கோடி தங்க நகைகள் பறிமுதல்

செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.16 கோடி தங்க நகைகள், ரூ.51,39 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்ஸிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சிங்கப்பூரிலிருந்து நேற்று முன்தினம் திருச்சிக்கு விமானத்தில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத் துறை வான் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் சோதனையிட்டனர். அப்போது, ஒரு பயணியின் பையில் அமெரிக்கா, சிங்கப்பூர், சவூதி அரேபியா ஆகிய நாடுகளின் கரன்ஸிகள் மற்றும் இந்திய ரூபாய் நோட்டுகள் ஆகியவை ரூ.51.39 லட்சம் மதிப்பில் இருந்த தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த வான் நுண்ணறிவுப்பிரிவு அலுவலர்கள், இதுகுறித்து அந்த பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல, சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூரிலிருந்து 2 விமானங்களில் நேற்று முன்தினம் திருச்சி வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத் துறை வான் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் பரிசோதித்தனர். இதில், 2 பயணிகள் தங்கள் உடமைகளில் மறைத்து கடத்தி வந்த 1,488 கிராம் எடை கொண்ட ரூ.1.16 கோடி மதிப்பிலான 8 தங்கச் சங்கிலிகள், 2 தங்க வளையல்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT