நாகப்பட்டினம்: வேளாங்கண்ணியில் பாலியல் வன்கொடுமை செய்து, சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கை முறையாக விசாரிக்காத பெண் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பகுதியில் ஆக. 30-ம் தேதி 13 வயது சிறுமி, உடல் எரிந்த நிலையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக, வழக்கு பதிவு செய்த வேளாங்கண்ணி காவல் ஆய்வாளர் விசித்ராமேரி, பின்னர் வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என்று புகார்கள் எழுந்தன. சிறுமியின் உடற்கூறாய்வில், அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, பின்னர் எரித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடத்து, சிறுமி கொலை வழக்கில் முறையான விசாரணையை மேற்கொள்ளாத வேளாங்கண்ணி பெண் காவல் ஆய்வாளர் விசித்ராமேரியை பணியிடை நீக்கம் செய்து தஞ்சை சரக டிஐஜி ஜியாவுல் ஹக் நேற்று உத்தரவிட்டார். இந்த விவகாரத்தில் முறையான விசாரணையை மேற்கொள்ள, மாவட்ட காவல் துறை சார்பில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.