கைது செய்யப்பட்ட கோகுல், கோகுல்நாத். 
க்ரைம்

அரவக்குறிச்சியில் வாகன சோதனையில் போலீஸார் மீது பெப்பர் ஸ்பிரே அடித்து தப்ப முயன்ற 2 பேர் கைது

செய்திப்பிரிவு

கரூர்: அரவக்குறிச்சியில் வாகன சோதனையின்போது, பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 2 பேர் போலீஸார் மீது பெப்பர்ஸ்பிரே அடித்துவிட்டு தப்பமுயன்றபோது கைது செய்யப்பட்டனர்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் நிலைய தலைமைக் காவலர் சரவணன், ஊர்க்காவல் படை வீரர் பிரபு ஆகியோர் நேற்றுமுன்தினம் அதிகாலை அரவக்குறிச்சி மின்வாரிய அலுவலகம் அருகில் ரோந்து சென்றனர். அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி, விசாரணை செய்தனர்.

திடீரென அவர்களில் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த பெப்பர் ஸ்பிரேவை எடுத்து காவலர்கள் மீது அடித்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சித்தார். உடனே, அவர்கள் இருவரையும் போலீஸார் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் புதுப்பட்டினத்தைச் சேர்ந்த கோகுல்(27), திருச்சி மாவட்டம் தொட்டியத்தைச் சேர்ந்த கோகுல்நாத்(21) என்பதும், அவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும், தற்போதுஅரவக்குறிச்சி பகுதியில் திருடுவதற்காக வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அவர்களை கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து இரும்புக் கம்பிகள், ஸ்குரூ டிரைவர், முகமூடி, கையுறை, பெப்பர் ஸ்பிரே ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT