கோவில்பட்டி: மதுரை கே.கே.நகரைச் சேர்ந்தவர் மணிமாறன் (65), தினபூமி நாளிதழ் உரிமையாளர். இவரது மகன் ரமேஷ்(45). இவர்கள் இருவரும் நேற்று மாலை திருநெல்வேலியில் இருந்து மதுரைக்கு காரில் சென்ற னர். காரை ரமேஷ் ஓட்டினார்.
கோவில்பட்டி அருகே நான்கு வழிச்சாலையில் நாலாட்டின்புதூர் மேம்பாலத்தைக் கடந்து சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார்,சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி, எதிர்புறம் உள்ள சாலையில் பாய்ந்து, எதிரே வந்த சுமை வாகனத்தின் மீது மோதியது.
சம்பவ இடத்திலேயே மணிமாறன் உயிரிழந்தார். காயமடைந்த ரமேஷை நாலாட்டின்புதூர் போலீஸார் மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். லேசான காயமடைந்த சுமை வாகன ஓட்டுநர் பேரையூர் தாலுகா சாப்டூரைச் சேர்ந்த அசோக்குமார் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
முதல்வர் இரங்கல்: மணிமாறன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.