பிரதிநிதித்துவப் படம். 
க்ரைம்

வியாசர்பாடியில் தீ மிதி விழா: தீக்குழிக்குள் தவறி விழுந்த பெண் காயம்

இ.ராமகிருஷ்ணன்

சென்னை: வியாசர்பாடியில் தீ மிதி விழாவில் பெண் பக்தர் ஒருவர் தவறிவிழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை வியாசர்பாடியில் உள்ள தீப்பாஞ்சம்மன் கோயிலில் நேற்று இரவு தீ மிதி திருவிழா நடைபெற்றது. பக்தர்கள் பலர் விரதம் இருந்து காப்பு கட்டி தீ மிதி திருவிழாவில் பங்கேற்றனர். நேற்று இரவு விழாவில் தீ மிதிக்கும்போது பெண் ஒருவர் கால் தவறி தீக்குண்டத்துக்குள் விழுந்தார். ஏற்கெனவே பாதுகாப்புக்காக நின்றிருந்த தீயணைப்புப் படை வீரர்கள் உடனடியாக அப்பெண் பக்தரை மீட்டனர். பின்னர் உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தீயணைப்புப் படையினர் உடனடியாக அவரை மீட்டதால் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தீ மிதி விழாவில் பெண் தவறி விழுந்த விவகாரம் குறித்து வியாசர்பாடி போலீஸார் விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT