க்ரைம்

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் பெண் தோழியுடன் ரீல்ஸ்; தட்டிக் கேட்ட ஊழியர் மீது தாக்குதல்: கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா மெட்ரோ ரயில் நிலையத்தில் இரு தினங்களுக்கு முன்னர் இளைஞர் ஒருவர், தனது தோழியுடன் அநாகரீகமான முறையில் ரீல்ஸ் எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கவனித்த ரயில் நிலைய பொறுப்பாளர், மயிலாடுதுறையைச் சேர்ந்த ஆகாஷ்(24), ‘இங்கே வீடியோ எடுக்க கூடாது’ என கூறியுள்ளார்.

இதில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட இளைஞர், தனது தோழியுடன் அங்கிருந்து சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து, மேலும் இரு நண்பர்களுடன் அங்கு வந்த இளைஞர், ரயில் நிலைய ஊழியர் ஆகாஷை தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் ஆகாஷ் புகார் அளித்தார்.

வழக்குப்பதிந்த போலீஸார், சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக் (18),ஆண்டன் டேவிஸ் (20), சூளை விஜய் (21) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT