மும்பை: கோகைன் மாத்திரைகளை உடலில் மறைத்து கடத்தி வந்த பிரேசில் பெண் ஒருவர் மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
பிரேசின் நாட்டின் சாவ் போலோ நகரில் இருந்து மும்பைக்கு வரும் பெண் ஒருவர் போதை மாத்திரைகளை கடத்தி வருவதாக வருவாய் புலனாய்வு இயக்குநரக (டிஆர்ஐ) அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் கடந்த புதன்கிழமை மும்பை வந்திறங்கிய பிரேசில் நாட்டுப் பெண்ணை அதிகாரிகள் இடைமறித்து விசாரணை நடத்தினர். இதில் அவர், விமானம் மும்பையில் தரையிறங்குவற்கு சற்றுமுன் கோகைன் போதைப் பொருள் நிரப்பிய 124 டியூப் மாத்திரைகளை விழுங்கியதாக தெரிவித்தார்.
இதையடுத்துப் அப்பெண்ணை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்திய அதிகாரிகள் பிறகுஅவரை ஜேஜே மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் அவரது உடலில் இருந்துகோகைன் மாத்திரைகள் எடுக்கப்பட்டு, பின்னர்பறிமுதல் செய்யப்பட்டன. அப்பெண் கடத்தி வந்த கோகைன் மதிப்பு ரூ.9.73 கோடியாகும். அப்பெண்ணை கைது செய்த அதிகாரிகள்,அவருடன் தொடர்புடைய கும்பலை கண்டறிய அவரிடம் விசாரிக்கின்றனர்.