க்ரைம்

சென்னை | ஏடிஎம்.களில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனத்தில் ரூ.1 கோடி கையாடல்: ஊழியர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகை குமார் (42). இவர் தி.நகர், கிரியப்பா சாலையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிறுவனம் தனது ஊழியர்கள் மூலம் சென்னையில் உள்ள ஏடிஎம்.களில்பணம் நிரப்பும் பணியை செய்துவருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறுவனத்தின் கணக்குகளை சரிபார்த்தபோது, சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தில் வேலை செய்த ஊழியர்கள் சிலர் ஒன்று சேர்ந்து சுமார் ரூ.1 கோடி வரை கையாடல் செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து கார்த்திகை குமார் அளித்த புகாரின் பேரில் பாண்டிபஜார் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து தனியார் நிறுவன ஊழியர் ஆர்.ஏ.புரத்தைச் சேர்ந்த பிரபுவை (40) கைது செய்தனர். இவ்வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக உள்ள மேலும் சிலரை தனிப்படை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT