க்ரைம்

திருமானூரில் தங்கியிருந்த 13 வங்கதேசத்தவர் கைது

தீவிர சோதனையில் ஈடுபட்ட போலீஸார்

செய்திப்பிரிவு

அரியலூர்: அரியலூர் மாவட்​டம் திரு​மானூரில் போலி ஆவணங்​கள் மூலம் பெற்ற விசா, ஆதார் வைத்​துக் கொண்டு கூலி வேலை பார்த்து வந்த வங்​கதேசத்​தைச் சேர்ந்த 13 பேரை போலீ​ஸார் நேற்று முன்​தினம் இரவு கைது செய்து சிறை​யில் அடைத்​தனர்.

வங்​கதேச நாட்டைச் சேர்ந்த சிலர், போலி ஆவணங்​கள் மூலம் விசாவை​யும், கொல்​கத்​தாவை முகவரி​யாகக் கொண்டு ஆதார் அட்​டை​யும் பெற்று தமிழகத்​தில் தங்கி வேலை பார்த்​து ​வரு​வ​தாக க்யூ பிரிவு போலீ​ஸாருக்கு தகவல் கிடைத்துள்​ளது.

          

இதையடுத்​து, தமிழகம் முழு​வதும் வெளி மாநிலங்​களில் இருந்து வந்து தங்​கி, கொத்​த​னார் வேலை, டைல்ஸ் ஒட்​டும் பணி உள்​ளிட்ட பணி​களில் ஈடு​பட்டு வரும் நபர்​களிடம் போலீ​ஸார் விசா​ரணை மேற்​கொண்டு வரு​கின்​றனர்.

அந்த வகை​யில், அரியலூர் மாவட்​டம் திரு​மானூரில் ஒரு​வருக்கு வீடு கட்​டும் பணி​யில் கொல்​கத்​தாவைச் சேர்ந்த 13 பேர் தங்கி வேலை பார்ப்​ப​தாக கிடைத்த தகவலின்​பேரில், திரு​மானூர் போலீ​ஸார் அந்த நபர்​களிடம் விசா​ரணை மேற்​கொண்​டனர்.

அப்போது விசா​ரணை​யில் அவர்​கள் முன்​னுக்கு பின் முரணாக பதில் அளித்​துள்​ளனர். இதையடுத்​து, அவர்​களிட​மிருந்த ஆவணங்​களை பார்த்​த​போது போலி ஆவணங்​கள் மூலம் விசா, ஆதார் அட்டை வைத்​திருப்​பதும், அவர்​கள் 13 பேரும் வங்​கதேசத்​தைச் சேர்ந்​தவர்​கள் என்​பதும் தெரிய​வந்​தது.

பின்​னர், 13 பேரை​யும் நேற்று முன்​தினம் இரவு போலீ​ஸார் கைது செய்​தனர். அரியலூர் மாவட்ட முதன்மை நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தி, சென்னை புழல் சிறை​யில் அடைத்​தனர்.

மேலும், மாவட்​டத்​தில் வெளி​நாடுகளைச் சேர்ந்த நபர்​கள் தங்கி உள்ளனரா என விசா​ரணை நடத்தி வரு​கின்றனர். இச்சம்பவம் அப்பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT