ஈரோட்டில் திருட்டு நடந்த ஆடிட்டர் வீட்டில் மோப்ப நாய் வீராவைக் கொண்டு சோதனை நடத்திய போலீஸார். 
க்ரைம்

ஆடிட்டர் வீட்டின் பூட்டை உடைத்து 150 பவுன் நகைகள் திருட்டு @ ஈரோடு

செய்திப்பிரிவு

ஈரோடு: ஈரோட்டில் ஆடிட்டர் வீட்டில் 150 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1.50 லட்சம் திருடுபோனது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ஈரோடு என்ஜிஓ காலனியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (69). ஆடிட்டர். இவரது மனைவி சாதனா.தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். என்ஜிஓ காலனியில் வாடகை வீட்டின் முதல் தளத்தில் இவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், தேனியில் நடந்த தனது உறவினர்வீட்டு திருமணத்தில் பங்கேற்பதற்காக, சுப்பிரமணி குடும்பத்துடன் சென்றுள்ளார்.

வீட்டின் உரிமையாளர் மகன்நேற்று காலை மாடிக்குச் சென்றபோது, சுப்பிரமணி வீட்டின் பூட்டுஉடைக்கப்பட்டு, கதவு திறந்துஇருந்ததைப் பார்த்தார். இதுகுறித்து அவர் சுப்பிரமணிக்குத் தகவல் அளித்தார். தகவலறிந்து வந்த சூரம்பட்டி போலீஸார், வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர்.

விசாரணையில், வீட்டின் பீரோவில் வைத்திருந்த 150 பவுன் நகைகள் மற்றும் ரூ.1.50 லட்சம் ரொக்கம்திருடுபோனது தெரியவந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள், நள்ளிரவில் திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து கைரேகை நிபுணர்கள்மற்றும் மோப்ப நாய் வீராஅழைத்து வரப்பட்டு, சோதனைநடைபெற்றது. மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளையும் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT