க்ரைம்

இந்து முன்னணி நிர்வாகி கொலையில் கைதானவர் சொத்து பறிமுதல்

செய்திப்பிரிவு

கோவை: இந்து முன்னணி அமைப்பின் கோவை மாநகர் மாவட்ட செய்தித் தொடர்பாளராக இருந்த சசிகுமார், 2016-ல் படுகொலை செய்யப்பட்டார்.

இவ்வழக்கில் சதாம் உசேன்,சுபையர், முபாரக், ரபிகுல்ஹசன் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே, கைது செய்யப்பட்ட சுபையர்,2012-ம் ஆண்டில் தான் வாங்கிய சொத்தை, தான செட்டில்மென்ட் பத்திரம் மூலம் தனது தாயார் பெயருக்கு மாற்றியதை என்ஐஏ அதிகாரிகள் கண்டறிந்தனர்.

பின்னர், இந்த சொத்தை நீதிமன்ற உத்தரவின் மூலம்கைப்பற்றி, இந்த வழக்கில் இணைத்தனர் என்று தேசிய புலனாய்பு முகமை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SCROLL FOR NEXT