க்ரைம்

சாத்தூரில் இருசக்கர வாகனத்தில் குட்கா, கஞ்சா கடத்தல்: 2 பேர் கைது

இ.மணிகண்டன்

சாத்தூர்: வெம்பக்கோட்டை அருகே பைக்கில் குட்கா, கஞ்சா கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 100 கிலோ குட்கா, 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

வெம்பக்கோட்டை அருகே உள்ள ராமுத்தேவன்பட்டி பகுதியில் தகவலின் பேரில் ஆலங்குளம் போலீஸார் தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது, அந்த வழியாக பைக்கில் சாக்கு மூட்டைகளுடன் சந்தேகத்திற்கிடமாக வந்த இருவரைப் பிடித்து சோதனையிட்டபோது அவர்கள் குட்கா மற்றும் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.

அதையடுத்து, அவர்களிடமிருந்த ரூ.62 ஆயிரம் மதிப்பிலான 100 கிலோ குட்கா பொருட்களையும் 1 கிலோ 100 கிராம் கஞ்சாவையும் கைப்பற்றினர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து குட்கா மற்றும் கஞ்சா கடத்தி வந்த நல்லமங்கலத்தைச் சேர்ந்த இறைவன் (29), அப்பையநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஜெய்சங்கர் (30) ஆகியோரை கைதுசெய்தனர்.

SCROLL FOR NEXT