க்ரைம்

சென்னை விமான நிலையத்தில் ரூ.23 லட்சம் மதிப்புள்ள 8,500 குவைத் தினார் பறிமுதல்

சி.கண்ணன்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இந்திய மதிப்பில் ரூ.23 லட்சம் மதிப்புள்ள 8,500 குவைத் தினார் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னையில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்பு செல்லும் விமானம் புதன்கிழமை மதியம் புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பி கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த கங்கா ஆஷார் (36) என்ற பெண் பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அதனால், அந்தப் பயணியை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்த போது, உள்ளாடைக்குள் ரூ.23 லட்சம் மதிப்புள்ள 8,500 குவைத் தினாரை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, தினாரை மொத்தமாக பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT