கோவை: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே 17 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் தொந்தரவு அளித்த புகாரின் பேரில் உடுமலை மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இதையடுத்து 3 சிறுவர்கள் உட்பட 9 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இவர்கள் மேலும் ஒரு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தது தெரியவந்தது. கைதானவர்களில் 6 பேர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மூன்று பேர் லட்சுமி மில்ஸ் சந்திப்பு அருகே உள்ள கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.
இதில் 17 வயது சிறுவன் சோப்பு ஆயிலை குடித்து நேற்று தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவனுக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.