க்ரைம்

சிறுமிக்கு பாலியல் கொடுமை: போக்சோவில் 9 பேர் கைது @ உடுமலை

செய்திப்பிரிவு

உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்த 17 வயது சிறுமி, அவரது தாத்தா வீட்டில்வசித்து வருகிறார். கடந்த சிலநாட்களாக சிறுமியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டதால், அவரைமருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்துச் சென்றனர்.

மருத்துவப் பரிசோதனையில், சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. உறவினர்கள் விசாரித்தபோது, பல மாதங்களாக 9 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி கூறியுள்ளார். இதுகுறித்து உடுமலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.

போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிந்து, ஜெயகாளீஸ்வரன் (19), மதன்குமார் (19), பரணிகுமார் (21), பிரகாஷ் (24),நந்தகோபால் (19), பவா பாரதி (22) மற்றும் 14, 15, 16 வயதுடைய 3 சிறுவர்கள் என 9 பேரை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT