க்ரைம்

மெட்ரோ ரயில் ஊழியரை தாக்கிய பின்னணி பாடகர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: கிராமிய பாடகரும், திரைப்பட பின்னணி பாடகருமான வேல்முருகன் இரு தினங்களுக்கு முன்னர் காரில் விருகம்பாக்கம், ஆற்காடு சாலை வேம்புலி அம்மன்கோவில் சிக்னல் சந்திப்பு அருகே மெட்ரோ ரயில்பணி நடைபெறும் பகுதியில் தடுப்புகளை விலக்கிவிட்டு காரில் சென்றார்.

இதைக் கண்டித்த மெட்ரோ ரயில் கட்டுமான ஊழியரை தாக்கினார். அதுகுறித்த புகாரின் பேரில் விருகம்பாக்கம் போலீஸார் வேல்முருகன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்துள்ளனர். பின்னர், அவரை ஜாமீனில் விடுவித்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

SCROLL FOR NEXT