உயிரிழந்த ஜாஸ்மீன், உமுல் ரெஜினா 
க்ரைம்

கரூரில் ஸ்கூட்டி மீது கார் மோதி விபத்து: தாய், மகள் உயிரிழப்பு

க.ராதாகிருஷ்ணன்

கரூர்: குளித்தலையில் ஸ்கூட்டி மீது கார் மோதிய விபத்தில் தாய், மகள் உயிரிழபந்தனர். இதுகுறித்து குளித்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் மாவட்டம், தாந்தோணிமலை அரசு கல்லூரி அருகே வசித்து வருபவர் ஜாஸ்மீன் (37). தையல் தொழிலாளியான இவரும், இவரது மகள் உமுல் ரெஜினா (17) இருவரும் ஸ்கூட்டியில் திருச்சி உறையூரில் உள்ள உறவினர் வீட்டிற்க்கு சென்று விட்டு கருர் – திருச்சி பைபாஸ் சாலையில் கரூர் நோக்கி வந்து கொண்டிருந்துள்ளனர்.

குளித்தலை வழியாக இராஜேந்திரம் பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது எதிரே திருச்சி நோக்கி அதிவேகமாக வந்த கார் ஒன்று மோதியதில் தாய் மகள் இருவரும் பலத்த ரத்த காயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

இதில் தாய் ஜாஸ்மீன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மகள் உமுல் ரெஜினா தலையில் பலத்த காயத்துடன் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இது குறித்து குளித்தலை போலீசார் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் ஜோன்ஸ் மரிய லெனின் மீது வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT