பறிமுதல் செய்யப்பட்ட பணம், நகை. 
க்ரைம்

சென்னை | திருட்டு ஆட்டோவில் சென்று வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த இருவர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: திருட்டு ஆட்டோவில் சென்று, வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டதாக இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை சைதாப்பேட்டை, விஜிபி சாலை பகுதியில் வசிப்பவர் கல்யாண பெருமாள் (47). கடந்த 10-ம் தேதி மதியம் இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றார். மறுநாள் காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டுஉடைக்கப்பட்டு உள்ளே வைத்திருந்த 13.5 சவரன் தங்க நகைகள்,பணம் ரூ.7 ஆயிரம் மற்றும் சிசிடிவிகேமராவின் டிவிஆர் ஆகியவைதிருடு போயிருந்தது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சதீஷ்குமார், சஞ்சய்

அதன்படி, போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர். சம்பவ இடம் அருகே உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதில், கல்யாண பெருமாள் வீட்டில் கைவரிசை காட்டியதுகிண்டி சஞ்சய் (22), கே.கே.நகர்சதீஷ்குமார் (19) என்பது தெரிந்தது.இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

விசாரணையில் கைது செய்யப்பட்ட சஞ்சய் மற்றும் சதீஷ்குமார், புனித தோமையர்மலை பகுதியில் ஆட்டோவை திருடிக்கொண்டு செல்லும் வழியில் கல்யாண பெருமாளின் வீடு பூட்டியிருப்பதை கண்டு அவரது வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள், பணம்மற்றும் பொருட்களை திருடியது தெரியவந்தது. மேலும் விசாரணையில் இருவர் மீதும் ஏற்கெனவே தலா 2 திருட்டு வழக்குகள் உள்ளதுதெரியவந்தது.

SCROLL FOR NEXT