பட விளக்கம்: கோவை விமான நிலையத்தில் நேற்று இரவு சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில், பயணியிடம் இருந்து மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த கடத்தல் தங்க கட்டிகள் மற்றும் செயின். 
க்ரைம்

கோவை விமான நிலையத்தில் ரூ.90 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

இல.ராஜகோபால்

கோவை: கோவை விமான நிலையத்தில் நேற்று இரவு சிங்கப்பூர் விமானத்தில் வந்த பயணியிடம் இருந்து ரூ. 90 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை விமான நிலையத்தில் நேற்று இரவு எட்டு மணி அளவில் சிங்கப்பூரில் இருந்து விமானம் தரையிறங்கியது. தகவலின் பெயரில் சந்தேகிக்கும் வகையில் வந்த இந்தியாவை சேர்ந்த ஆண் பயணி ஒருவரிடம் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அவரிடமிருந்து பத்து தங்க கட்டிகள் மற்றும் இரண்டு செயின்கள் என ரூ. 90,28,000 மதிப்பிலான 1,220 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிடிபட்ட தங்கம் எதற்காக கடத்தப்பட்டது, யார் இதன் பின்னணியில் உள்ளார்கள் என்கிற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT