க்ரைம்

சென்னை | கூடா நட்பு விவகாரத்தில் பெயின்டரை கொலை செய்த கொத்தனார் கைது

செய்திப்பிரிவு

சென்னை: கோயம்பேட்டில் பெயின்டர் கொலை செய்யப்பட்ட வழக்கில்,கொத்தனார் கைது செய்யப்பட்டுள் ளார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை கோயம்பேடு, சீமாத்தம்மன் நகர், விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பெயின்டர் மைக்கேல் துரை பாண்டியன் (52). இவரது மனைவி பொன்மாலா(47). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

இவர் தனது வீட்டின் தரை தளம் மற்றும் இரண்டாவது தளத்தில் உள்ள வீடுகளை வாடகைக்கு விட்டு, முதல் தளத்தில் வசித்து வருகிறார். இந்த வீட்டை 4 ஆண்டுகளுக்கு முன் கட்டும்போது, கொத்தனார் வேலை செய்த, வந்தவாசியைச் சேர்ந்த வெங்கடேசன்(36) என்பவர் இரண்டாவது தளத்தில் வாடகைக்கு வசித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 28-ம் தேதிமாலை அருகில் உள்ள வீட்டின் மொட்டை மாடியில் விழுந்து கிடந்த மைக்கேல் துரைபாண்டியனை, அங்கிருந்தவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து கோயம்பேடு பேருந்து நிலைய போலீஸார் விசாரித்தனர். இதில், கொத்தனார் வெங்கடேசனுக்கும், பொன்மாலாவுக்கும் இடையே கூடா நட்பு இருந்துள்ளது.

கடந்த 28-ம் தேதி மாலைஇவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் பொன்மாலாவை வெங்கடேசன் அடித்துள்ளார். இதுகுறித்துதகவல் அறிந்த மைக்கேல் துரை பாண்டியன், வெங்கடேசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து, வெங்கடேசன் அங்கிருந்து தப்பி ஓடி, 2-வது மாடியில் ஏறி உள்ளார். மைக்கேல் துரை பாண்டியன் பின்தொடர்ந்து சென்றார். அப்போது, மைக்கேல்துரை பாண்டியனை மாடியிலிருந்து தள்ளிவிட்டு, வெங்கடேசன் தப்பிச்சென்றார்.

மைக்கேல் துரை பாண்டியன் பக்கத்து வீட்டு மாடியில் விழுந்து இறந்துவிட்டார். இதையடுத்து தலைமறைவாக இருந்த வெங்கடேசனை போலீஸார் நேற்றுமுன்தினம் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT