க்ரைம்

சென்னை ரயில்வே கோட்டத்தில் கடந்த 6 மாதங்களில் ரூ.12.36 கோடி பணம், போதைப் பொருள் பறிமுதல்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை ரயில்வே கோட்​டத்​தில் ஆர்​பிஎஃப் போலீ​ஸார் கடந்த ஏப்​ரல் முதல் செப்​டம்​பர் வரையி​லான 6 மாதங்​களில் ரூ.12.36 கோடி மதிப்​புள்ள போதைப் பொருட்​கள், ஹவாலா பணம், தங்​கம், வெள்​ளிப் பொருட்​களை பறி​முதல் செய்​துள்​ளனர்.

சட்​டப்​பேரவைத் தேர்​தலை​யொட்டி இந்த ஆண்​டில் தமிழகம் முழு​வதும் நடத்​தப்​பட்ட சிறப்பு சோதனைகள், தொடர் கண்​காணிப்பு காரண​மாக, உரிய ஆவணங்​கள் இல்​லாமல் ரயில்​களில் கடத்​தப்​பட்ட ஹவாலா பணம், தங்​கம், வெள்​ளிப் பொருட்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன.

இது​தொடர்​பாக 24 வழக்​கு​களில் 31 பேர் கைது செய்​யப்​பட்​டனர். ரூ.4.27 கோடி மதிப்​புள்ள சொத்​துகள் பறி​முதல் செய்​யப்​பட்டு, சம்​பந்​தப்​பட்ட துறை அதி​காரி​களிடம் ஒப்​படைக்​கப்​பட்​டன.

ரயில்​கள், ரயில் நிலை​யங்​கள் வழி​யாக போதைப் பொருட்​கள் கடத்​தப்​படுவதை தடுக்க எடுக்​கப்​பட்ட தீவிர நட​வடிக்​கை​யில் ரூ.8.09 கோடி மதிப்​புள்ள போதைப் பொருட்​கள், புகை​யிலை, மதுபானங்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன.

இதில் குறிப்​பாக, சர்​வ​தேச சந்​தையில் ரூ.5 கோடி மதிப்​புள்ள 5 கிலோ எடையுள்ள உயர்​ரக ‘ஹைட்ரோஃபோனிக் கஞ்சா’ பறி​முதல் செய்​யப்​பட்​டது.

இது​தொடர்​பாக 50 பேர் கைது செய்​யப்​பட்​டனர். ரயில்​கள், ரயில் நிலை​யங்​களில் தனியாகத் தவித்த, வீட்​டை​விட்டு ஓடிவந்த மற்​றும் காணா​மல்​போன 46 சிறுமிகள் உட்​பட மொத்​தம் 242 சிறார்​கள், ஆர்​பிஎஃப் போலீ​ஸாரால் மீட்​கப்​பட்டு, குழந்​தைகள் நல அமைப்​பு​களிடம் ஒப்​படைக்​கப்​பட்​டனர்.

ஓடும் ரயி​லில் ஏறவும் இறங்​கவும் முயன்ற 8 பயணிகளின் உயிரை ஆர்​பிஎஃப் காவலர்​கள் துரித​மாக செயல்​பட்டு காப்​பாற்​றியுள்​ளனர்.

சந்​தேகத்​துக்​குரிய நபர்​களைக் கண்​காணித்து, சிசி​டிவி மற்​றும் தமிழக ரயில்வே போலீ​ஸாருடன் இணைந்து நடத்​திய சோதனை​யில், பயணிகளின் உடைமை​களைத் திருடிய 110 குற்​றவாளி​கள் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

அவர்​களிடம் இருந்து ரூ.19.06 லட்​சம் மதிப்​புள்ள பொருட்​கள் மீட்​கப்​பட்​டுள்​ளன. ரயில்வே சட்ட விதி​களின்​படி, மகளிர் பெட்​டி​யில் சட்​ட​விரோத​மாகப் பயணித்த 309 பேரிடம் இருந்து ரூ.4.07 லட்​சமும், மாற்​றுத் திறனாளி​கள் பெட்​டி​யில் பயணித்த 565 பேரிடம் இருந்து ரூ.5.11 லட்​சமும் அபராத​மாக வசூலிக்​கப்​பட்​டுள்​ளது.

ரயில்வே வளாகங்​களில் அனுமதி​யின்றி வாக​னங்​களை நிறுத்​திய 12,112 பேர் மீது நட​வடிக்கை எடுக்​கப்​பட்டு ரூ.55.32 லட்​சம் அபராதம் வசூலிக்​கப்​பட்​டுள்​ளது. இத்​தகவல் சென்னை ரயில்வே கோட்ட செய்​திக்​குறிப்​பில் தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT