கடலூர்: கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகேயுள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில், பழைய ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் அம்பேத்கர் சிலை உள்ளது. நேற்று முன்தினம் இரவுபைக்கில் வந்த 4 பேர், அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். சிலை மீது பட்டு, பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்றக்கட்டிடத்தில் விழுந்து வெடித்துள்ளது.
இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீஸார் வழக்கு பதிவு செய்து, அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (21), கிருஷ்ணகுமார் (21), சதீஷ் (29), விஜயராஜ் (22) ஆகியோரைக் கைதுசெய்தனர். இந்த நிலையில், கடலூர் துணை மேயர் தாமரைச்செல்வன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், பெட்ரோல் குண்டு வீசியவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.