க்ரைம்

சென்னை | திருந்தி வாழ்ந்த ரவுடி கொலை

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை தண்டையார்பேட்டை திடீர் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் தேசிங்கு (47). இவர் மீது5-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. கடந்த 7 ஆண்டுகளாக திருந்தி, மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். நேற்று மாலைதிடீர் நகர் எஸ்.என். செட்டி சாலை,3-வது தெரு சந்திப்பு பகுதியில் தேசிங்கு நின்று கொண்டிருந்தார்.

அப்போது, ஆட்டோவில் வந்தகும்பல் ஒன்று பயங்கர ஆயுதங்களால் தேசிங்கை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது. மீன்பிடி துறைமுகம் போலீஸார் விரைந்து வந்து, தேசிங்கை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

போலீஸார் வழக்குப் பதிவுசெய்து, சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT