பிரதிநிதித்துவப் படம் 
க்ரைம்

மதுரை சித்திரைத் திருவிழா கூட்டத்தில் ஆயுதங்களுடன் சுற்றிய 20 பேர் கைது

செய்திப்பிரிவு

மதுரை: சித்திரைத் திருவிழாக் கூட்டத்தில் ஆயுதங்களுடன் சுற்றிய 20 பேரை போலீஸார் கைது செய்தனர்.

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல் நேற்று அதிகாலை நடந்தது. இதையொட்டி, கோரிப் பாளையம், ஆழ்வார்புரம், மதிச்சியம், தல்லாகுளம், நெல்பேட்டை உள்ளிட்ட பகுதியில் பல்லாயிரக் கணக்கானோர் திரண்டனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி நடக்கும் குற்றச் செயல்களை தடுக்க, சாதாரண உடையில் ஆண், பெண் காவலர்கள் தீவிர ரோந்து சுற்றினர்.

கள்ளழகர் வைகை ஆற்றுக்குள் இறங்கும் நேரத்துக்கு முன்னதாக கோரிப்பாளையம், ஆழ்வார்புரம் பகுதியில் கூட்டத்தில் சந்தேகிக்கும் நபர்களை அடையாளம் கண்டு சிலரை பிடித்தனர். இவர்களை ஆய்வு செய்தபோது, சுமார் 20-க்கும் மேற்பட்டோர் கத்தி போன்ற ஆயுதங்கள் வைத்திருந்தது, ஆயுதங்களை பயன்படுத்தி குற்றச் சம்பவத்தில் ஈடுபட திட்டமிட்டி ருந்ததும் தெரிந்தது. அவர்களிடம் இருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்த நிலையில், மதிச்சியம் போலீஸார் அவர்கள் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT