க்ரைம்

கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற அறுபத்து மூவர் விழாவில் செல்போன், நகை பறிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற அறுபத்து மூவர் விழாவில் பக்தர்களிடம் செல்போன் மற்றும் நகை பறிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி திருவிழா கடந்த 10 நாட்களாக கோலாகலமாக நடைபெற்றது. விழாவின் ஒரு பகுதியாக அறுபத்து மூவர் விழா கடந்த சனிக்கிழமை பிற்பகல் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கானோர் கோயிலில் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்த கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி 6 செல்போன்கள், 1 சவரன் செயின், ஒரு கொலுசு ஆகியவை திருடுபோயுள்ளன. இந்த விவகாரம் குறித்து மயிலாப்பூர் காவல் நிலைய குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SCROLL FOR NEXT