பிரதிநிதித்துவப் படம் 
க்ரைம்

ஐபிஎல் டிக்கெட்டை கள்ளச்சந்தையில் விற்ற 5 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: ஐபிஎல் டிக்கெட்டை கள்ளச் சந்தையில் விற்ற 5 பேரை போலீஸார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 8 டிக்கெட்கள் மற்றும் ரூ.31,500-ஐ பறிமுதல் செய்தனர்.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை - பெங்களூரு அணிகளுக்கிடையே ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் நடந்தது. இந்நிலையில், கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்களை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்பவர் களைப் பிடிப்பதற்காக சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, ஐபிஎல் டிக்கெட்களை கள்ளச் சந்தையில் விற்பனை செய்த, தண்டையார் பேட்டையைச் சேர்ந்த வினோத் குமார் ( 36 ), ஏழு கிணறு பகுதியைச் சேர்ந்த அசோக் குமார் ( 21 ), சூளையைச் சேர்ந்த இம்மானுவேல் ( 30 ), மணப்பாக்கத்தைச் சேர்ந்த ரூபன் ரமேஷ் ( 26 ), ஆர்.ஏ.புரத்தைச் சேர்ந்த சரவணன் ( 27 ) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 8 டிக்கெட்களையும், ரூ.31,500 பணத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT