க்ரைம்

கோவை அருகே கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை

செய்திப்பிரிவு

கோவை: கோவை தெலுங்குபாளையம் மில் வீதியைச் சேர்ந்த ராமச்சந்திரன்(53), பாட்டில் மூடி தயாரிப்பு நிறுவனம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்தார். இவரது மனைவி விசித்ரா(46), மகள்கள் ஸ்ரீநிதி(22), ஜெயநிதி(14). கனடாவில் பட்டப் படிப்பு முடித்த ஸ்ரீநிதி,அண்மையில் கோவை திரும்பினார். ஜெயநிதி தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

ராமச்சந்திரன் புதிதாக வீடு கட்டிவந்தார். மேலும், தொழில் விரிவாக்கத்துக்காக கடன் பெற்றிருந்தாராம். இந்நிலையில், நேற்று காலை அவர்களது வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் சந்தேகமடைந்த ராமச்சந்திரனின் சகோதரி, நேற்று மதியம் அங்குசென்று பார்த்தபோது, ராமச்சந்திரன், விசித்ரா, ஸ்ரீநிதி, ஜெயநிதிஆகியோர் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “கடன் தொல்லை காரணமாக ராமச்சந்திரன் உள்ளிட்ட நால்வரும் விஷமருந்திதற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று தெரிகிறது. எனினும், தொடர்ந்து விசாரித்து வருகிறோம்’’ என்றனர்.

SCROLL FOR NEXT