க்ரைம்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 7 கிலோ கஞ்சா பறிமுதல்: இளம் பெண் கைது

செய்திப்பிரிவு

சென்னை: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையிலான ரயில்வே போலீஸார் நேற்று முன்தினம் இரவு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, பயணிகள் காத்திருப்போர் அறை அருகே ஒரு இளம் பெண் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தார். இதைக் கண்ட ரயில்வே போலீஸார், சந்தேகத்தின் பேரில் அவரைப் பிடித்து விசாரித்தனர். மேலும் அவரது பையைச் சோதித்தபோது, அதில் ரூ.1.40 லட்சம் மதிப்புள்ள 7 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.

இதையடுத்து, அவரை சென்ட்ரல் ரயில்வே காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது, அவர் ஒடிசாவைச் சேர்ந்த கலியபெகேராவின் மனைவி ரீனா பெகேரா(26) என்பதும், ஒடிசாவில் இருந்து எடுத்து வந்ததும், இங்கிருந்து கேரளாவுக்கு எடுத்துச்செல்ல திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் அவரைக் கைது செய்து, 7 கிலோ கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT