க்ரைம்

கட்சி லெட்டர் பேடு, லேப்டாப் திருட்டு: மன்சூர் அலிகான் போலீஸில் புகார்

செய்திப்பிரிவு

சென்னை: தனது கட்சி அலுவலகத்தில் இருந்தகட்சி லெட்டர் பேட், ரப்பர் ஸ்டாம்ப், லேப்டாப் உள்ளிட்டவைகள் திருடு போனதாக நடிகர் மன்சூர் அலிகான் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: நடிகர் மன்சூர் அலிகான் இந்தியஜனநாயக புலிகள் என்ற கட்சியின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைவதற்கான பேச்சுவார்த்தையில் மன்சூர் அலிகான் கலந்து கொண்டார்.

தன்னிச்சையாக அதிமுகவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக கூறி கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகான் நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்று கூறிக் கொண்ட கண்ணதாசன் என்பவர் அறிவிப்பு வெளியிட்டார்.

இதுஒருபுறம் இருக்க, ‘கண்ணதாசன் பொதுச்செயலாளர் இல்லை அப்பதவியில் குன்றத்தூரைச் சேர்ந்த பாலமுருகன் தான் உள்ளார். அவர் அலுவலக உதவியாளராகத்தான் இருந்தார். என மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

போலீஸ் விசாரணை: இந்நிலையில், நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள தனதுகட்சி அலுவலகத்தில் இருந்த லெட்டர் பேட், ரப்பர் ஸ்டாம்ப், லேப்டாப் உள்ளிட்டவற்றை கண்ணதாசன் திருடிச் சென்றுவிட்டதாக மன்சூர் அலிகான் சார்பில் சபீர்அகமது என்பவர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SCROLL FOR NEXT