க்ரைம்

மக்களவை தேர்தல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை: 35 பேருக்கு குண்டர் சட்டத்தில் சிறை

செய்திப்பிரிவு

சென்னை: மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தமிழகத்தில் ஒரே கட்டமாக அடுத்த மாதம் 19-ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போலீஸார் முடுக்கிவிட்டுள்ளனர்.

அதன்படி தலைமறைவு ரவுடிகள், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த ஜனவரி 1 முதல் இந்த மாதம்17-ம் தேதி வரை ஒருவார காலத்தில் சென்னை பெருநகரில், கொலை, கொலை முயற்சி மற்றும்பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில்ஈடுபட்டதாக 92 பேர், திருட்டு, நகை பறிப்பு, வழிப்பறிமற்றும் பண மோசடி குற்றங்களில் ஈடுபட்டதாக 41பேர், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனைசெய்ததாக 47 பேர், குட்கா விற்பனையில் ஈடுபட்ட14 பேர், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 2 பேர் உட்படமொத்தம் 207 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 11 முதல் நேற்று முன்தினம் (17-ம் தேதி) வரையிலான ஒரு வார காலத்தில் மட்டும் 35 பேர் மீது குண்டர் சட்டத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், குற்ற செயல்களை முற்றிலும் தடுக்கும் வகையில் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் எச்சரித்துள்ளார்.

SCROLL FOR NEXT