கோப்புப்படம் 
க்ரைம்

ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.3.67 லட்சம் பறிமுதல்: தனிப்படை போலீஸார் நடவடிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் இருவேறு இடங்களில் ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.3.67 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்திருப்பதால், பல்வேறு கட்டுப்பாடுகளை காவல் துறையினர் அமல்படுத்தி வருகின்றனர்.

முக்கியமாக தேர்தல் ஆணையம் அறிவித்தபடி, ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கம் எடுத்துச்சென்றால், பறிமுதல் செய்யப்படுகிறது. இந்நிலையில், வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானா பகுதியில் நேற்று முன்தினம் இரவு போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பகீரத் (30) என்பவர் வந்தார். அவரதுவாகனத்தை போலீஸார் மடக்கிசோதனையிட்டனர். அப்போது,அவர் பையில் வைத்திருந்த ரூ.2.67 லட்சத்துக்குரியஆவணத்தை கேட்டனர்.

அவரிடம் பணத்துக்கான ஆவணம் இல்லாததால் அப்பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர், அப்பணம் தேர்தல் பறக்கும் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. எதற்காக பணம் கொண்டு செல்லப்பட்டது என தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதேபோல், சென்னை அண்ணா சாலை மன்றோ சிலை அருகே இருசக்கர வாகனத்தில் வந்த டெல்லியைச் சேர்ந்தமனிஷ் குப்தா (49) என்பவரிடமிருந்து வாகன சோதனையின்போது ஒருலட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT