கைது செய்யப்பட்ட காமாட்சி, பிரகாஷ். 
க்ரைம்

ஓசூர் அருகே காதலை கைவிட மறுத்த மகளை கொன்று ஏரியில் வீசியதாக பெற்றோர் கைது

செய்திப்பிரிவு

ஓசூர்: ஓசூர் அருகே காதலைக் கைவிடமறுத்த மகளை அடித்துக் கொன்றதாக பெற்றோர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்அருகேயுள்ள பாகலூர் பட்டவாரப்பள்ளியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(37). இவரது மகள் ஸ்பூர்த்தி(16), பாகலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

இவர் சில ஆண்டுகளாக முத்தாலி பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர்சிவா(23) என்பவரைக் காதலித்து வந்தார். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இருப்பினும், இவர்களது காதலுக்கு ஸ்பூர்த்தியின் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், 2022-ல் வீட்டைவிட்டு வெளியேறிய ஸ்பூர்த்தி, சிவாவுடன் சென்றார். இகுறித்த புகாரின் பேரில் ஓசூர் அனைத்து மகளிர் போலீஸார் ஸ்பூர்த்தியை மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும், சிவாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, சிறையிலிருந்து வெளியே வந்த சிவாவுடன், ஸ்பூர்த்தியின் காதல் தொடர்ந்துள்ளது. கடந்த 14–ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற ஸ்பூர்த்தி, மீண்டும் வீடு திரும்பவில்லை. தனது மகளைக் காணவில்லை என பாகலூர் போலீஸில் பிரகாஷ் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், பாகலூர் அண்ணா நகர் ஏரியில் நேற்று முன்தினம் இரவு ஸ்பூர்த்தியின் உடல் மீட்கப்பட்டது. அவரது தலையில் காயங்கள் இருந்தன. போலீஸாரின் விசாரணையில், பிரகாஷ், அவரது மனைவி காமாட்சி(34), சித்தி மீனாட்சிஆகியோர் சேர்ந்து ஸ்பூர்த் தியை கம்பியால் தாக்கி கொலைசெய்து, உடலை ஏரியில்வீசிவிட்டு, காணாமல் போனதாக நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து, பிரகாஷ், காமாட்சி, மீனாட்சி ஆகியோரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

SCROLL FOR NEXT