திருப்பூர்: வெள்ளகோவில் அருகே சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய 7 பேரை, போக்சோ சட்டத்தின் கீழ் காங்கயம் அனைத்து மகளிர் போலீஸார் நேற்று கைது செய்தனர்.
வெள்ளகோவிலை சேர்ந்த 17 வயது சிறுமி, கடந்த 9-ம் தேதி நடந்த கோயில் விழா கலை நிகழ்ச்சியை பார்க்க சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த இருவர் நடனம் குறித்து சிறுமியிடம் பேசியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, யூடியூப்பில் நடன வீடியோ எடுத்து பதிவிடுவதாக கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். இதையறிந்த அங்கிருந்த மேலும் 5 இளைஞர்கள், சிறுமியை அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன் கொடுமையில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக காங்கயம் அனைத்து மகளிர் போலீஸாரிடம் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன் பேரில், வெள்ள கோவில், மூலனூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மணிகண்டன் ( 29 ), பிரபாகரன் ( 32 ), தினேஷ்குமார் ( 28 ), பாலசுப்பிரமணி ( 30 ), நவீன்குமார் ( 26 ), நந்தகுமார் ( 30 ), தமிழ்ச்செல்வன் ( 28 ) ஆகிய 7 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.