க்ரைம்

முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ்-க்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் வழங்கல்

செய்திப்பிரிவு

சென்னை: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்-க்கு எதிராக அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்-அவுட் நோட்டீஸை சிபிசிஐடி போலீஸார் வழங்கி உள்ளனர்.

கடந்த 2021-ம் ஆண்டு பெண் எஸ்.பி. ஒருவருக்கு அப்போதைய சிறப்பு டிஜிபியான ராஜேஷ் தாஸ் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் அளித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் ராஜேஷ் தாஸ் உட்பட இரு அதிகாரிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தது.

இதை எதிர்த்து மேல் முறையீடு செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இந்நிலையில் அவர் தலைமறைவானது தெரியவந்துள்ளது. ஒடிசாவில் பதுங்கி இருக்கலாம் என அங்கும் போலீஸார் விரைந்துள்ளனர்.

இதனிடையே அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் ராஜேஸ் தாஸ்-க்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸை சிபிசிஐடி போலீஸார் வழங்கி உள்ளனர்.

SCROLL FOR NEXT