எஸ்.பி. கார்த்திகேயன். 
க்ரைம்

தி.மலையில் பரவிய குழந்தை கடத்தல் வீடியோ - பொய்யான தகவல் என போலீஸ் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தை கடத்தல் என பொய்யான வீடியோவை சமூக வலைதளத்தில் பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் எச்சரித்துள்ளார்.

குழந்தைகள், சிறுவர்கள், சிறுமிகள் கடத்தப்படுவதாகவும், பர்தா அணிந்து பெண் வேடமிட்ட ஆண்கள் சுற்றி வருவதாகவும், இக்கடத்தலுக்காக வட மாநிலங் களில் இருந்து 400 பேர் தமிழ கத்தில் குவிந்துள்ளதாகவும், கடத்தப்படும் சிறுவர், சிறுமிகளின் உடலை அறுத்து உடல் உறுப்பு களை ஒரு கும்பல் எடுப்பதாக கூறப்படும் காட்சிகள் கடந்த 10 நாட்களாக சமூக வலைதளத்தில் அதிவேகமாக பரவி வருகின்றன.

இதனால், பெற்றோர் அச்ச மடைந்துள்ளனர். மிதிவண்டி மற்றும் பேருந்துகளில் செல்லும் பிள்ளைகளை தனியாக பள்ளிக்கு அனுப்புவதை தவிர்த்து, பாதுகாப்புடன் அழைத்துச் சென்று விட்டு வருகின்றனர். இந்நிலை யில், திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறுவர், சிறுமிகள் தொடர்ந்து கடத்தப்படுவதாகவும், காவல் துறையினர் ரகசியமாக விசாரணை நடத்தி வருவதாகவும் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.

இதற்கு காவல்துறை சார்பில் மறுப்பு தெரிவித்து, குழந்தைகள் கடத்தல் என்ற வதந்திகளை பரப்புபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “திருவண்ணாமலை அடுத்த செங்கம் சாலையில், அய்யம்பாளையம் புதூர் கிராமத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வட மாநிலத்தைச் சேர்ந் தவர்கள், குழந்தைகளை கடத்த முயற்சி செய்ததாகவும், அப்போது அவர்கள் மீது கிராம மக்கள் கற் களை வீசி தாக்கி குழந்தைகளை மீட்டதாகவும், பின்னர் வட மாநிலத்தவர்கள் தப்பித்து ஓடி விட்டதாகவும் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க சிலர் சென்றுள்ளதாக சமூக வலைதளத்தில் பொய்யான வீடியோ பகிரப்பட்டு வருகிறது.

மேலும், வட மாநிலத்தவரை பிடித்து தாக்கி காவல் துறையினர் விசாணை செய்வதுபோல் மற் றொரு பொய்யான வீடியோ காட்சிகள் பரவி வருகின்றன. இந்த பொய்யான செய்தியை யாரும் நம்ப வேண்டாம். பொய்யான செய்தியை சமூக வலை தளங்களில் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT