க்ரைம்

குலசேகரம் அருகே பழங்குடி பெண் மர்ம மரணம் - கோட்டாட்சியர் விசாரணை

செய்திப்பிரிவு

நாகர்கோவில்: குலசேகரம் அருகே மணலோடை புறாவிளையில் மலைவாழ் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த சுகுமாரன் என்பவரின் மகள் ஜெனிஷா ( 20 ). இவர் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பரில் அதே பகுதியைச் சேர்ந்த ஜெனிஷ் ( 22 ) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

ஜெனிஷா கடந்த 4 மாதங்களாக திருநந்திக்கரை பகுதியில் தையல் பயிற்சிக்கு சென்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜெனிஷா வாயில் நுரைதள்ளிய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். ஜெனிஷா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் பழங்குடியின மக்கள் குலசேகரம் காவல் நிலையம் மற்றும் குலசேகரம் அரசு மருத்துவமனை முன் திரண்டனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் உறுதியளித்தனர். இந்நிலையில் பத்ம நாப புரம் கோட்டாட்சியர் தமிழரசி நேற்று ஜெனிஷாவின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினார். குலசேகரம் காவல் நிலையம் மற்றும் குலசேகரம் அரசு மருத்துவமனை முன் திரண்டனர்.

SCROLL FOR NEXT