க்ரைம்

வியாபாரிகளிடம் நிதி கேட்டு மிரட்டிய வேலூர் பாஜக நிர்வாகி மீது வழக்கு

செய்திப்பிரிவு

வேலூர்: வேலூர் கொணவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் முஸ்தாக். இவர், பாஜக சிறுபான்மை பிரிவு உறுப்பினராக உள்ளார். முஸ்தாக் கடந்த 24-ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த வியாபாரி கலீல் (33) என்பவரிடம் பாஜகவுக்கு நிதி கொடுக்குமாறு கேட்டுள்ளார்.

இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, வியாபாரி கலீலை, பாஜக நிர்வாகி முஸ்தாக் மிரட்டியுள்ளார். அதே போல், அதே பகுதியைச் சேர்ந்த வியாபாரிகளான சான்பாஷா என்பவரிடம் ரூ.5 ஆயிரம், அஸ்கர் என்பவரிடம் ரூ.2 ஆயிரம் கேட்டும் முஸ்தாக் மிரட்டியுள்ளார்.

இது தொடர்பாக வியாபாரிகள் 3 பேரும், பாஜக நிர்வாகி முஸ்தாக் மீது வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில், முஸ்தாக் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT