சிவசுப்பிரமணியன் 
க்ரைம்

”ரா” உளவு அதிகாரியாக நடித்த இளைஞர் கைது @ கடலூர்

செய்திப்பிரிவு

கடலூர்: கடலூர் மாவட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு நேற்று முன்தினம் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது.

இந்த அழைப் பில் பேசியவர், தான் ‘ரா’ உளவுத்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி என்றும், டெல்லியில் இருந்து வந்திருப்பதாகவும், சிதம்பரத்தில் உள்ள முக்கிய பிரமுகர் ஒருவரின் மகனை விசாரிக்க வந்துள்ளதாகவும், இதற்கு தேவை யான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து பல கேள்விகளை காவல் அதிகாரிகள் கேட்டுள்ளனர். அதற் கும் அந்த நபர் தெளிவான பதில்களை அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இந்தத் தகவல் உண்மை என நம்பிய காவல் துறை அதிகாரிகள். அவர் கூறியது போன்ற மேல் நடவடிக்கைக்கு தேவையான காவலர் களை சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் இருக்க உத்தரவிட்டனர். இதற்கிடையே, சிதம்பரம் பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு போலீஸார் ரோந்து சென்றனர். அங்கு, சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவரை பிடித்து விசாரிக்க, அவர், தான் ‘ரா’ உளவு அதிகாரி என்று கூறியுள்ளார். உடனே சுதாரித்துக் கொண்ட காவல் துறையினர், காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்ததில், மேற்கண்ட நபர் தான் ஏற்கெனவே தங்களைத் தொடர்பு கொண்டு பேசியவர் என்பதை உறுதிபடுத் தினர்.

தொடர் விசாரணையில் அவர், பரங்கிப் பேட்டை ஆற்றங்கரையை தெருவைச் சேர்ந்த சிவ சுப்பிரமணியன் ( 30 ) என்பது தெரியவந்தது. கடல் வாழ் உயிரினங்கள் குறித்து பட்டயப் படிப்பு முடித்துள்ள இவர்,மும்பை பகுதியில் பணியில் இருந்த போதுபோதை பொருட்களுக்கு அடிமையாகி, செங்கல்பட்டு போதை மறுவாழ்வு மையத் தில் சிகிச்சையில் இருந்ததாகவும், சில மாதங்களுக்கு முன்பு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு விடுதலையானவர் என்ப தும் தெரியவந்தது. அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT