க்ரைம்

ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய வருங்கால வைப்பு நிதி அலுவலக அதிகாரி கைது @ நெல்லை

அ.அருள்தாசன்

திருநெல்வேலி: திருநெல்வேலி வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கியதாக அதிகாரி ஒருவரை சிபிஐ கைது செய்துள்ளது.

திருநெல்வேலியில் இயங்கி வரும் ஒரு மென்பொருள் நிறுவனத்தினர் மத்திய அரசின் ஏபிஆர்ஓ திட்டத்தின் கீழ் ரூ.3 கோடி பெற்றுள்ளதாக தெரிகிறது. புதிய தொழில்முனைவோரை வருங்கால வைப்பு நிதி நிறுவனத்துடன் இணைந்து மத்திய அரசு உருவாக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்நிலையில், இந்த திட்டத்தின் கீழ் அந்த மென்பொருள் நிறுவனம் பெற்ற தொகையை முறையாக பயன்படுத்தவில்லை என்று தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக ஆய்வு நடத்திய திருநெல்வேலி வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தை சேர்ந்த அதிகாரி கபிலன், அந்த நிறுவனத்திடம் 5 சதவிகிதம் லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது.

இந்த புகார் தொடர்பாக சிபிஐ விசாரித்து வந்த நிலையில் முதல் கட்டமாக ரூ.2 லட்சத்தை வருங்கால வைப்பு நிதி அதிகாரி கபிலன் முன்தொகையாக பெற்றபோது சிபிஐ போலீஸார் வசம் கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT