க்ரைம்

மதுரை | பாஜக மாவட்ட நிர்வாகி நள்ளிரவில் வெட்டிக்கொலை

என். சன்னாசி

மதுரை: பாஜக மாவட்ட நிர்வாகி மதுரையில் நேற்று (பிப்ரவரி 15) நள்ளிரவில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்ட பா.ஜ.க ஓபிசி அணி மாவட்ட செயலாளர் சக்திவேல்(34), நேற்று நள்ளிரவு வண்டியூர் டோல்கேட் அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது மர்ம கும்பல் ஒன்று, அவரை பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இந்த சம்பவம் குறித்து அண்ணா நகர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்ட சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அண்ணாநகர் காவல்துறையினர், சக்திவேலை கொலை செய்த கும்பலை தேடிவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சக்திவேலின் தனிப்பட்ட மோதல் காரணமாக கொலை சம்பவம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கொலை சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT