மஞ்சுநாத், அகிலா 
க்ரைம்

ஸ்ரீவில்லி. கலசலிங்கம் பல்கலை.யில் ஆந்திர மாணவர், மாணவி தூக்கிட்டு தற்கொலை

செய்திப்பிரிவு

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த ஆந்திராவைச் சேர்ந்த மாணவரும், மாணவியும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

ஆந்திர மாநிலம், அனந்த பூர் மாவட்டம் நரசபுரம் கிராமத்தைச் சேர்ந்த நரேந்திரா என்பவரது மகன் மஞ்சுநாத் (20). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன்கோவிலில் உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழக விடுதியில் தங்கி பி.டெக். 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

விடுமுறைக்குச் சொந்த ஊர் சென்ற மஞ்சுநாத், நேற்று காலை கல்லூரிக்கு வந்துள்ளார். பின்னர், தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அதேபோல், ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம் வடிகபள்ளி கிராமத்தைச் சேர்ந்த கோபால் என்பவரது மகள் ஹொதிவாலி பள்ளி அகிலா (19). இவர் விடுதியில் தங்கி பி.டெக். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரும் நேற்று காலை விடுதி அறையில் தூக் கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த போலீஸார், தற்கொலை செய்து கொண்ட இருவரது உடல்களை யும் மீட்டனர். ஏடிஎஸ்பி சூரிய பிரகாஷ் விசாரணை நடத்தினார். இதுகுறித்து கிருஷ்ணன் கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். ஒரே நாளில் இருவர் தற்கொலை செய்துகொண்டது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT