க்ரைம்

போக்சோ சட்டத்தில் தந்தை கைது @ உதகை

செய்திப்பிரிவு

உதகை: உதகையை சேர்ந்த கட்டிட தொழிலாளிக்கு மனைவி, 13 வயதில் மகள் உள்ளனர். அந்த பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் மகள் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

மனைவி இல்லாத நேரத்தில் மது அருந்திவிட்டு சொந்த மகளுக்கே கட்டிட தொழிலாளி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதற்கிடையே சிறுமிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், உதகை அரசு மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதித்த போது, இரண்டு மாத கர்ப்பிணியாக இருப்பது தாயாருக்கு தெரியவந்தது. இது குறித்து சிறுமியிடம் கேட்டபோது, மது அருந்திவிட்டு தந்தை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக தாயார் அளித்த புகாரின் பேரில் உதகை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அல்லிராணி தலைமையிலான போலீஸார் விசாரித்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கட்டிட தொழிலாளியை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT