குஷ்தீப் பன்சால் 
க்ரைம்

ரூ.65 கோடி மோசடி செய்த பிரபல வாஸ்து நிபுணர் கைது

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லியில் உள்ள சபர்வால் டிரேடிங் கம்பெனி உரிமையாளர் கமல் சர்பாவால் அளித்த புகாரின்படி பிரபல வாஸ்து நிபுணர் குஷ்தீப் பன்சால் மற்றும் அவரது சகோதரரை அசாம் மற்றும் டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து அசாம் போலீஸார்கூறும்போது, ‘‘கமல் சர்பாவாலுக்கு குஷ்தீப் பன்சால் பலரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். ஆனால், அவர்கள் அனைவரும் கூட்டு சேர்ந்து ரூ.65 கோடிக்கு பண மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது என்று தெரிவித்தனர்.

கடந்த 1997-ல் அப்போதைய பிரதமராக இருந்த ஐ.கே.குஜ்ரால் அரசு கவிழ்ந்தது. அதற்கு நாடாளுமன்ற கட்டிடத்தின் நூலக அமைப்புசரியில்லை. வாஸ்து சரியில்லாததால் அவரது ஆட்சி கவிழ்ந்தது என்று குஷ்தீப் பன்சால் குறை கூறியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT