திருச்சி: திருச்சியில் லாட்டரி விற்பனையை தடுக்கும் பணியில், உதவி ஆய்வாளர் தங்கராஜ் தலைமையில் தனிப்படை செயல்பட்டு வந்தது.
ஆனால், கடந்த சில நாட்களாக லாட்டரி விற்பனை படுஜோராக நடைபெற்று வருவதாகப் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, பணியில் அலட்சியமாக இருந்ததாக தனிப்படை உதவி ஆய்வாளர் தங்கராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் குமார், தலைமைக் காவலர்கள் சங்கர், முருகன், ராஜு ஆகிய 5 பேரும் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். தொடர் விசாரணையில், எஸ்.ஐ. உள்ளிட்ட 5 போலீஸாரும் லாட்டரிச் சீட்டு விற்பனை செய்யப்படுவதற்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 5 பேரையும் பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையர் என்.காமினி நேற்று முன்தினம் இரவு உத்தரவிட்டார்.